போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் ஆத்துப்பாலம் சாலை

published 2 years ago

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் ஆத்துப்பாலம் சாலை

 

கோவை:  உக்கடத்தில் கடந்த சில ஆண்டுகளாக மேம்பாலப் பணி நடைபெற்று வருவதால் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் ஆத்துப்பாலம் வழியாகச் செல்லாமல், புட்டுவிக்கி ரோடு வழியாகச் சென்றது. இதனால் கரும்புக்கடை பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்தது.

ஆனால் சில நாட்களாக மீண்டும் ஆத்துப்பாலம் வழியாக பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களை அனுமதித்த காரணத்தால், கரும்புக்கடை பகுதி போக்குவரத்து நெரிசலில் திணறுகிறது. ஆத்துப்பாலத்திலிருந்து குளக்கரையில் போடப்பட்டச் சாலை ஆரம்பிக்கும் இடம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.

பாலக்காடு சாலை மற்றும் பொள்ளாச்சி சாலையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும், இப்பகுதியைக் கடந்து செல்லக்கூடிய காரணத்தால், எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இருசக்கர வாகனங்கள் சந்து பொந்துகளில் நுழைந்து செல்லும்போது, பேருந்துகளில் உரசக் கூடிய நிலையும் ஏற்படுகிறது.

மேலும் கரும்புக் கடையின் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லக்கூடிய குறுக்குச் சாலைகளிலிருந்து எண்ணற்ற இருசக்கர வாகனங்களும், ஆட்டோக்களும், பொதுமக்களும் வெளிவருவதால், அப்பகுதியானது வாகன ஓட்டிகளுக்குத் தலைவலி நிறைந்த பகுதியாகக் காணப்படுகிறது.

அதுமட்டுமின்றி கரும்புக் கடைப் பகுதியில் பேருந்துகள் நிறுத்திப் பயணிகளை ஏற்றி, இறக்கி, செல்வதால் பின்னால் வரும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe