சேர்த்து வைத்த அனைத்து பணத்தையும் இலங்கை நிவாரண நிதிக்கு வழங்கிய கோவையைச் சேர்ந்த அக்கா- தம்பி

published 2 years ago

சேர்த்து வைத்த அனைத்து பணத்தையும் இலங்கை நிவாரண நிதிக்கு வழங்கிய கோவையைச் சேர்ந்த அக்கா- தம்பி

கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹசான் பாஷா. இவருக்கு ஹனா பாத்திமா (வயது 9) மற்றும் ஹர்பான் பாஷா (7) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இருவரும் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
ஹனா பாத்திமா மற்றும் ஹர்பான் பாஷா ஆகிய இருவரும் தமிழக முதலமைச்சர் அறிவித்த இலங்கை நிவாரண நிதிக்கு உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தைக் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்துக் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஹசான் பாஷா கூறியதாவது:-
"ஹனா மற்றும் ஹர்பான் தங்களுக்குக் கிடைக்கும் பணத்தை செலவு செய்யாமல், உண்டியலில் சேர்த்து வைத்து அதை ரம்ஜான் தினத்தன்று என்னிடமோ அல்லது எனது மனைவியிடமோ கொடுத்து ஏழை மக்களுக்கு உதவும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். 
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்களுக்குத் தமிழக அரசு சார்பாக முதலமைச்சர் அறிவித்த இலங்கை நிவாரண நிதிக்கு தாங்கள் சேமித்த பணத்தை வழங்கலாம் என ஹனா மற்றும் ஹர்பான் என்னிடம் கூறினர்.
ஆகையால், கோவை ஆட்சியர் சமீரன் அவர்களை நேரில் சந்தித்து, தாங்கள் உண்டியலில் சேமித்த பணத்தை நிவாரண நிதியாக வழங்கினர். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் இருவரையும் பாராட்டினார். 
உண்டியலில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை நாங்கள் எண்ணிப் பார்க்கவில்லை. ஹனா மற்றும் ஹர்பான் இது போன்று நல்ல காரியங்களை இந்த சிறுவயதிலேயே செய்வது எனக்கும், எனது மனைவிக்கும் மிகவும் பெருமையாக உள்ளது. மேலும், பொதுமக்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe