கோவை பெட்ரோல் குண்டு வீச்சு.. 2 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

published 2 years ago

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு.. 2 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

பெட்ரோல் குண்டு வீசி சம்பவத்தில் மேலும் இருவர் மீது  தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் வசிக்கும் இந்து முன்னணி நிர்வாகி தியாகு என்பவர் கார் மீதும் சுப்புலட்சுமி நகர் பாஜக நிர்வாகி கமலக்கண்ணன் கார் மீதும் பெட்ரோல் குண்டு வீசிய ஜேசுராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு கடந்த 27"ஆம் தேதி முதல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதே போல ஒப்பணக்கார வீதியிலுள்ள மாருதி  கலெக்‌ஷன்ஸ் கடையில் கடந்த மாதம் 22"ஆம் தேதி   இரவு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் உக்கடம் சிட்டி பார்க் வீதியை பாஷா என்பவர்  கடந்த 3"ஆம் தேதி கைது செய்யபட்டு மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

மத்திய சிறையில் இருக்கும் இருவரையும் கோவை மாநகர காவல் ஆணையர்  பாலகிருஷ்ணன் உத்திரவின் பேரில் தேசிய பாதுகாபு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதற்கான நகல்கள் ஜேசுராஜ் மற்றும் பாஷாவிடம் வழங்கப்பட்டது.

ஏற்கனவே பாஜக அலுவலகம், 
பாஜக நிர்வாகியின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சதாம் உசேன் மற்றும் அகமது சிகாபுதீன் ஆகிய இருவர் மீது கடந்த 13"ஆம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டதின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் இதுவரை நான்கு பேர் மீது  தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe