பரம்பிக்குளம் அணையின் பழுதடைந்த மதகைச் சீரமைக்கும் பணி 20-ஆம் தேதிக்குள் நிறைவடையும்: அமைச்சர் மு. பெ. சாமிநாதன் தகவல்

published 2 years ago

பரம்பிக்குளம் அணையின் பழுதடைந்த மதகைச் சீரமைக்கும் பணி 20-ஆம் தேதிக்குள் நிறைவடையும்: அமைச்சர் மு. பெ. சாமிநாதன் தகவல்

கோவை: பரம்பிக்குளம் ஆழியாறு பாசன (பி. ஏ. பி) திட்டத்தின் முக்கிய அணையான பரம்பிக்குளம் அணையில், கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி ஒரு மதகின் ஷட்டரை தாங்கும் சங்கிலி அறுந்தது. இதனால் ஷட்டர் பழுதடைந்து 5.8 டி. எம். சி தண்ணீர் வெளியேறி கேரளா வழியாகக் கடலில் கலந்தது.

தற்போது பழுதடைந்த மதகைச் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
"ஷட்டர் பழுது குறித்து முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டு சென்று புதிய ஷட்டர் அமைக்க சுமார் ரூ. 7.20 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,  அரசாணை வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்ற 2 ஷட்டர்களின் பராமரிப்பு பணியும் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளில் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வரும் 20-ஆம் தேதிக்குள் பணிகள் நிறைவடையும். அதற்குப்பிறகு பெய்யும் மழை நீர் வீணாகாமல் சேமிக்கப்படும்."
இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, சர்க்கார்பதி பகுதியில் உள்ள அணைகளை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, நீர்வளத்துறைத் தலைமை பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe