கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதானவர்களின் குடும்பத்தார் பேட்டி

published 2 years ago

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதானவர்களின் குடும்பத்தார் பேட்டி

கோவை கார் வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 6 நபர்கள் கோவை மத்திய சிறையில் உள்ளார்கள். அவர்களை சென்னை பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

முன்னதாக சிறை வளாகத்தின் வெளியே கைது செய்யப்பட்ட நபர்கள் பெற்றோர் தங்களது மகன்களை காண காத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து, கார் வெடிப்பு வழக்கில் கைதான சகோதரர்கள் பெரோஸ் இஸ்மாயில் மற்றும் நவாஸ் இஸ்மாயில் ஆகியோரின் தாய் மைமுன் பேகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாங்கள் 16 வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதனால் நாங்கள் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு குடி போவது எவ்வளவு சிரமம் என்று எங்களுக்கு தெரியும். அதேபோல் சம்பவம் நிகழ்வதற்கு ஒரு நாள் முன்பு முபின் 3-வது மாடியில் குடியிருந்து வருகிறேன்.

எனது வீட்டை காலி செய்ய வேண்டும். எனக்கு இதய நோய் உள்ளது. கனமான பொருட்களை தூக்க முடியாது. இதனால் உங்களது மகனை அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி உதவி செய்வதற்காக எனது இரு மகன்களையும் அனுப்பி வைத்தேன்.

முபினை அடையாளம் காட்டியது நான்தான். எனது மகன்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. தற்போது என்.ஐ.ஏ விசாரணை நடைபெற்று வருகிறது. உண்மையான விசாரணையில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டு எனது மகன்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முகமது தல்காவின் தாயார் அப்சத் பீவி கூறியதாவது
எனது கணவர் ஏற்கனவே ஜெயிலில் உள்ளார். அதே கண்ணோட்டத்தில் எனது மகனையும் பார்க்கிறார்கள். அவன் முபினுக்கு காரை விற்பனை செய்துள்ளான். அது தவிர வேறு எந்த தொடர்பும் கிடையாது.என்றார்.

முகமது ரியாஸ் தாயார் சுனைதா பேகம் கூறியதாவது
எனது மகன் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறான். முபின் வீடு மாற்றுவதற்கு கேட்டுக்கொண்டதன் பேரில் எனது மகன் சென்றான். இந்த சம்பவத்திற்கும் எனது மகனுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இல்லை. என்றார்.

அப்சர் கானின் தாயார் பல்கீஸ் கூறியதாவது:

சம்பவம் நடைபெற்ற மறுநாள் வீட்டில் எனது மகன் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டுக்கு வந்த போலீசார் உங்களது அக்கா மகன் முபின் இறந்துவிட்டான். அதனால் விசாரணைக்காக உங்களது மகனை அழைத்து செல்கிறோம் என்று கூறி அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் எனது மகனுக்கு தொடர்பு இருந்திருந்தால் அவன் வீட்டில் வந்து தூங்கியிருப்பானா. எனவே அவனுக்கு எந்த தொடர்பும் கிடையாது. எனவே இந்த வழக்கில் வேண்டுமென்றே எனது மகனை கைது செய்துள்ளனர். என்றார்.

முகமது அசாருதீன் தாயார் நூர்ஜகான் கூறியதாவது: எனது மகன் கார் சர்வீஸ் செய்யும் வேலைக்கு சென்று வந்தார். முபின் உறவினர் என்பதால் அடிக்கடி எனது மகன் அவரிடம் பேசி வந்தார். எனவே எனது மகனுக்கு இந்த சம்பவத்தில்  தொடர்பு இல்லை. விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று கைது செய்துள்ளனர். என்றார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe