கோவையில் குப்பை வாகனங்களை நிரப்பிச் செல்ல அறிவுறுத்தல்

published 2 years ago

கோவையில் குப்பை வாகனங்களை நிரப்பிச் செல்ல அறிவுறுத்தல்

கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை அகற்றுவதற்காக மாநகராட்சி சார்பில் 11 வாகனங்கள், தனியார் ஒப்பந்ததாரர்கள் சார்பில் 45 வாகனங்கள் என மொத்தம் 56 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த வாகனங்களில் குப்பைகளை முழு கொள்ளளவு ஏற்ற மாநகராட்சி உயர் அதிகாரிகள் மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறுகையில், "மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை வலையினால் மூடி சாலை மற்றும் தெருக்களில் சிதறாமல் வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

குப்பை எடுக்கும் வாகனங்களில் முழு கொள்ளளவு ஏற்ற வேண்டும். வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் அனைத்து தெருக்களிலும் நாள்தோறும் குப்பைகளை எடுக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி, குப்பை இல்லா மாநகரமாகக் கோவையை உருவாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஓட்டுநர்கள் மற்றும் மண்டல சுகாதார ஆய்வாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது." என்றனர்.

மூன்றாவது கனெக்ஷனுக்கான விடை

இந்த கனெக்ஷனுக்கான படத்தை காண இதற்கு முந்தய செய்தியை காணலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe