கோவையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு 36 மருத்துவ குழுக்கள்

published 2 years ago

கோவையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு 36 மருத்துவ குழுக்கள்

கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கையாக 36 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஊரகப் பகுதிகளில் தினசரி சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் நாள்தோறும் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு பெரியளவில் ஏதும் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. உயிரிழப்பும் இதுவரை ஏற்படவில்லை.

பருவமழை தீவிரமாகும் போது காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் 12 வட்டாரங்களுக்கும் சேர்த்து 36 சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுக்கள் தேவைப்படும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளில் பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

நம்ம ஊரு கனெக்‌ஷன்


 உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? இந்த கனெக்‌ஷனுக்கான விடை அடுத்த செய்திக்குள் பதிவிடப்படும்...   

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe