வருமான வரி வரம்பை உயர்த்த கோரி கோவையில் த.பெ.தி.க ஆர்ப்பாட்டம்

published 2 years ago

வருமான வரி வரம்பை உயர்த்த கோரி கோவையில் த.பெ.தி.க ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் வருமான வரி உச்ச வரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். பின்னர் நிருபர்களிடம்  கு.ராமகிருஷ்ணன் கூறும்போது:-

பொருளாதார அடிப்படையில் முன்னேறிய சமுகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது தவறானது. ஆண்டுக்கு ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.  
ஆனால் வருமான வரி வரம்மை 5 லட்சமாக வைத்து கொண்டு, 8 லட்சம் சம்பாதிப்பாதிக்கும் முன்னேறிய பிரிவை சேர்ந்தவர்களை ஏழைகள் என நீதிமன்றம் கூறியுள்ளது . எனவே 5 லட்சம் சம்பதிப்பவர்களை பரமஏழைகள் என்று அறிவிக்க வேண்டும், வருமான வரி உச்ச வரம்பை ரூ. 8 லட்சமாக உயர்த்த வேண்டும்.

தினமும் 23 ரூபாய் சம்பாதிப்பவர்கள் வறுமைகோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் என சொல்கின்றனர். ஆனால் 2,222 ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்று அறிவித்து இருப்பது தவறானது. இதை மக்களிடம் கொண்டு செல்ல தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்.

10 சதவீத இட ஒதுக்கீடு 76 சமூகத்தினக்கு போவதாக செல்கின்றனர். உண்மையில் அப்படி கிடைக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து ஏராளமான போலீசார் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe