தொடர் மழையால் ஆழியார்-சோலையார் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

published 2 years ago

தொடர் மழையால் ஆழியார்-சோலையார் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை: கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை அடிக்கடி பெய்துள்ளது.

இதனால் பி. ஏ. பி திட்டத்திற்குட்பட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகமாகி முழு கொள்ளளவை எட்டியது.  இதேபோன்று வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் இருந்தும், பி. ஏ. பி திட்ட அணைகளுக்கு தண்ணீர்வரத்து அதகிமாகி முழு கொள்ளளவை எட்டியது.

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை மொத்தம் 120 அடியைக் கொண்டதாகும். இந்த அணை தென்மேற்கு பருவமழையால், ஆகஸ்டு மாதம் 18-ஆம் தேதி முழு கொள்ளளவையும் எட்டியது.

அதன்பின்னர் கடந்த மாதம் இறுதி முதல் வடகிழக்கு பருவமழையால், ஆழியார் அணைக்கு ஓரளவு தண்ணீர் வரத்து இருந்ததுடன், நீர்மட்டமும் குறையாமல் தொடர்ந்து 3 மாதமாக முழு கொள்ளளவையும் எட்டிக் கொண்டிருக்கிறது. தற்போது ஆழியார் அணைக்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அதே அளவு தண்ணீர், பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி 119.30 அடியாக, தண்ணீர் உள்ளது.

வால்பாறையை அடுத்த பி. ஏ. பி திட்டத்திற்குட்பட்ட மொத்தம் 160 அடி கொண்ட சோலையார் அணையின் நீர்மட்டம், கடந்த ஜூலை மாதத்தில் முழு கொள்ளளவை எட்டியது. அதே நிலை தற்போதும் நீடித்து வருகிறது. தொடர்ந்து 4 மாதமாக சோலையார் அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளது. நேற்றைய நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 345 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் வரத்தும், 250 கன அடி தண்ணீர் வெளியேறப்படுகிறது. பி. ஏ. பி திட்டத்திற்குட்பட்ட சோலையார், ஆழியார் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து பல மாதமாக முழு கொள்ளளவையும் எட்டியவாறு இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe