'காவல்துறையினருடன் ஒரு நாள்': நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவிகள் நெகிழ்ச்சி

published 2 years ago

'காவல்துறையினருடன் ஒரு நாள்': நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவிகள் நெகிழ்ச்சி

கோவை: கோவை மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் 'ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்' என்ற திட்டத்தின் கீழ் காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டக் காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் 'காவல்துறையினருடன் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கோவை சரகக் காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி தலைமையில், கோவை மாவட்ட காவல்துறை எஸ்பி பத்ரி நாராயணன் முன்னிலையில் காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 30 மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பி. ஆர். எஸ் வளாகத்திற்குச் சென்று பல்வேறு நிகழ்வுகளில் இறந்த காவலர்களுக்கான நினைவு தூண்களைப் பார்வையிட்டனர். அதன் பின்னர் கோவை மாவட்ட ஆயுதப்படையில் அமைந்துள்ள ஆயுதக் கிடங்கில் உள்ள காவலர்கள் பயன்படுத்தும் வெவ்வேறு வகையான துப்பாக்கிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைப் பார்வையிட்டும், அதனை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் தெரிந்து கொண்டு அதனைக் கையாண்டனர்.

அதனைத் தொடர்ந்து கோவை ரைபில் கிளப்-ஐ பார்வையிட்டனர். அங்குத் துப்பாக்கிகளின் வகை மற்றும் அவற்றிற்கு இடையிலான வித்தியாசம் பற்றி மாணவியருக்கு உயர் அதிகாரிகள் எடுத்துக்கூறினார்கள்.

மாணவியருக்கு காவல்துறையின் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களை மனதளவில் வலுப்படுத்தி பாலியல் குற்றங்கள் இல்லாத மாவட்டமாகக் கோவை மாவட்டத்தை உருவாக்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதற்குக் கோவை மாவட்ட காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe