கோவையில் வாடகை வாகன ஓட்டுநர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

published 2 years ago

கோவையில் வாடகை வாகன ஓட்டுநர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

கோவை: கோவை சிவானந்தா காலனி டாடாபாத் பகுதியில், இன்று வாடகை வாகனங்கள் ஓட்டுநர்கள் ஒரு நாள்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் வாகன பர்மிட்டை பதிவிறக்கம் செய்வதை அரசு எளிமைப்படுத்த வேண்டும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அனைத்து பதிவு கட்டணங்களையும் 177 சதவீதம் உயர்த்துவதைத் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறைத்து அதனை ஜி. எஸ். டி-க்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசைத் தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும், மானிய விலையில் டீசல் வழங்குவதற்கு வழிவகை செய்து தர வேண்டும், சுற்றுலா தளங்களில் சுகாதாரமான முறையில் கழிப்பறைகளை அமைத்துத் தர வேண்டும், வாகனங்களைத் தடுத்து நிறுத்தி ஓட்டுநர்களுக்கு அபராதம் என்ற பெயரில் ரூ. 5 ஆயிரம், 10 ஆயிரம் வசூலிப்பதைத் திரும்பப் பெற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe