கோவையில் "ஆயு மாரத்தான் 2022" : ஆயுர்வேத விழிப்புணர்வு ஓட்டம் ..!

published 2 years ago

கோவையில் "ஆயு மாரத்தான் 2022" : ஆயுர்வேத விழிப்புணர்வு ஓட்டம் ..!

கோவை: ஆயுர்வேதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் "ஆயுர் மாரத்தான் 2022" ஆயுர்வேத விழிப்புணர்வு ஓட்டம்  நாளை மறுநாள் ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெறுகிறது.

தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு கோவையில் ஆயுர் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. சிகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற உள்ள இந்த "ஆயு மாரத்தான் 2022" போட்டியானது ஆர்.எஸ்.புரம் பகுதியில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணிக்கு துவங்குகிறது.

இந்த போட்டியானது ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் துவங்கி டி.வி சாமி சாலை, கவுளி பிரவுன் சாலை மற்றும் டி.பி சாலை மார்க்கமாகச் சென்று காந்திபார்க் ரவுண்டானாவை சுற்றி மீண்டும் சாஸ்திரி சாலை மைதானத்தை வந்தடைகிறது.

2.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் இந்த மாரத்தான் போட்டியானது ஆண்கள் பெண்களுக்கு தனித்தனியே நடைபெறுகிறது. 3 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 14 வயதுக்கு மேற்பட்டோருக்கு என 2 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகின்றது.

இதில் 14 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் முறையே வழங்கப்படுகிறது.

சிறார்களுக்கான பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.ஆயிரம் பரிசுத்தொகையும் கோப்பைகளும் வழங்கப்படுகிறது.

போட்டியில் பங்குபெறுபவர்களுக்கு டி-சர்ட், சான்றிதழ்கள், வழங்கப்படுகிறது. இவை தவிர முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.

மாரத்தான் போட்டியின் நிறைவாக குழந்தைகளின் ஜூம்பா  நடனம் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

நம்ம ஊரு கனெக்‌ஷன்

உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? இந்த கனெக்‌ஷனுக்கான விடை அடுத்தடுத்த செய்திகளுக்குள் பதிவிடப்படும்...  
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe