சோமனூர் அருகே பராமரிப்பு பணிகள் காரணமாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

published 2 years ago

சோமனூர் அருகே பராமரிப்பு பணிகள் காரணமாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

கோவை: சேலம் ரெயில் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த வழித்தடங்களில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 
"கோவை மாவட்டம் வாஞ்சிபாளையம்- சோமனூர் இடையே தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் காரணமாக இந்த மாதம் முழுவதும், டிசம்பர் 31-ஆம் தேதி வரை சேலம்- கோவை இடையேயான பயணிகள் ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்படும்.

அதே போல் திருப்பூர்- வாஞ்சிப்பாளையம் இடையிலான தண்டவாளப் பராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை காலை 6.00 மணிக்குப் பதிலாக 3 மணி நேரம் தாமதாக காலை 9.00 மணிக்குப் புறப்படும். எர்ணாகுளம்- பெங்களூர் விரைவு ரயில் (12678) எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து காலை 9.10 மணிக்குப் பதிலாக 2.30 மணி நேரம் தாமதாக காலை 11.40 மணிக்குப் புறப்படும்.

அத்துடன் திருச்சி- பாலக்காடு டவுன் பயணிகள் ரயில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து பகல் 1.00 மணிக்குப் பதிலாக 2.30 மணி நேரம் தாமதமாகப் பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படும்.

அதே போல், நாகர்கோவில்- கோவை ரயில் (16321) இன்று நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து காலை 7.35 மணிக்குப் பதிலாக 2 மணி நேரம் தாமதமாகக் காலை 9.35 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe