கார்த்திகை தீப ஒளியில் ஜொலித்த பேரூர் படித்துறை..! - புகைப்படங்கள்

published 2 years ago

கார்த்திகை தீப ஒளியில் ஜொலித்த பேரூர் படித்துறை..! - புகைப்படங்கள்

கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி கோவை பேரூர் படித்துறையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி படித்துறையை ஜொலிக்க வைத்தது காண்போரை வெகுவாக கவர்ந்தது.

கார்த்திகை தீப திருநாளில் அவரவர் இலங்களிலும், கோவில்களிலும் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் கார்த்திகை தீப ழியாவான நேற்று மாலை திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டதையடுத்து தமிழகம் முழுக்க உள்ள கோவில்களும், இல்லங்களிலும் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்நிலையில் கோவையில் உள்ள கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றங்கரையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி படித்துறையை ஜொலிக்க செய்தனர்.

கோவையில் முக்கிய ஆறாக விளங்கக்கூடிய நொய்யல் ஆற்றின் பெருமையை பறைசாற்றும் வகையில் "நொய்யல்" என எழுத்து வடிவில் தீபங்களால் வடிவமைத்தது அங்கு வந்த அனைவரையும் கவர்ந்தது.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கடந்த பல வருடங்களாக கோவை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை தூய்மைப்படுத்துவது, ஆற்றங்கரை பகுதிகளில் மரம் நடுவது போன்ற செயல்களை முன்னெடுத்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், நொய்யல் மிக முக்கியமான ஆறாக விளங்குவதாகவும் அடுத்த தலைமுறையினருக்கு இந்த ஆறு மிக முக்கியமானது எனவும் தெரிவித்தார். ஆறுகளை வழிபடும் முறைகள் பழங்காலம் தொட்டே இருந்து வருவதால் கார்த்திகை தீபத்திருநாளில் பேரூர் படித்துறையில் விளக்குகளை ஏற்றி நொய்யல் ஆற்றை வழிபட்டதாகத் தெரிவித்தார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe