கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்கள்: தொழில் வணிகத்துறை கூடுதல் ஆணையர் தகவல்

published 2 years ago

கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்கள்: தொழில் வணிகத்துறை கூடுதல் ஆணையர் தகவல்

கோவையின் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை: தொழில்துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தொழில் வணிகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்டிரின்டிக்கி பச்சாவ் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், சென்னை, கோவை, திருப்பூர், கரூர், மதுரை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், ஓசூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, கோவையில் பொறியியல், ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் உள்பட பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் மையமும், பொள்ளாச்சியில் தென்னை நார் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்யும் மையமும் அமைக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில், கோவை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகை வாசன், கொடிசியா பொருளாளர் திருஞானம், தொழில் அதிபர்கள் உட்படக் கோவை மாவட்டத்திலிருந்து 600 உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe