கோவை ப்ரூக்பான்ட் சாலை சிக்னலை அகற்றி ரவுண்டானா அமைப்பு

published 2 years ago

கோவை ப்ரூக்பான்ட் சாலை சிக்னலை அகற்றி ரவுண்டானா அமைப்பு

கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய நகரமாகக் கோவை உள்ளது. இங்கு நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது மாநகரில் முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை அகற்றிவிட்டு ரவுண்டானா அமைத்து போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பணியைத் தொடங்கி உள்ளனர். இந்த பணிகளைப் போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் முன்னின்று தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, கோவையில் அதிக போக்குவரத்து நெரிசலும், அதிக நேரம் சிக்னலுக்காக காத்திருக்க வேண்டியுள்ள லாலி ரோடு சந்திப்பு, மேட்டுப்பாளையம் சாலையில் சிந்தாமணி சந்திப்பு மற்றும் புரூக் பாண்டு சாலையில் கிக்கானி பள்ளி சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்த போக்குவரத்து சிக்னல்களை முழுவதுமாக அகற்றியுள்ளனர்.

அதற்குப் பதிலாக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் ரவுண்டானா அமைத்துள்ளனர். இதன் காரணமாக அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் சுலபமாகச் சென்று வருகின்றன. இந்த 3 இடங்களிலும் வாகன நெரிசல் கணிசமாகக் குறைந்துள்ளது. இதில் புரூக் பாண்டு சாலையில் கிக்கானி பள்ளி சந்திப்புப் பகுதியில் தற்போது நிரந்தரமாக ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பணியினை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர். இந்த ரவுண்டானா காரணமாகப் போக்குவரத்து சுலபமாகி உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். ஆனாலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானா பகுதியில் புழுதி மண் பரப்பதால் சற்று அவதி அடைந்து வருகின்றனர்.

இதேபோன்று ப்ரூக்பாண்ட் சாலையில் மற்றொரு சிக்னலில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், சிக்கெனலுக்காகக் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும் கோட்டப் பொறியாளர், சாலைப் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அலுவலர்களுடன் இணைந்து ப்ரூக்பாண்ட் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யதுள்ளனர்.

இதில், ப்ரூக்பாண்ட் சாலையிலிருந்து தேவாங்கர் பள்ளி சிக்னலில் வலதுபுறம் வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, ப்ரூக்பாண்ட் சாலையிலிருந்து பூ மாா்கெட், ஆா்.எஸ்.புரம், சிந்தாமணி, காந்திபுரம், மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள், தேவாங்கர் பள்ளி சிக்னலில் வலதுபுறம் திரும்பாமல் நேராகச் சென்று, சிரியன் சா்ச் ரோட்டில் வலதுபுறம் திரும்பி பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று, ப்ரூக்பாண்ட் சாலை வழியாக அவினாசி சாலை பழைய மேம்பாலத்திற்குச் செல்லும் வாகனங்கள், தேவாங்கர்பேட்டை சிக்கெனலுக்காகக் காத்திருக்காமல் தொடர்ந்து பயணம் செய்யலாம். தேவாங்கர் பள்ளி சாலை மற்றும் அவினாசி சாலை பழைய மேம்பாலத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகள் வழக்கம்போல் பயணத்தை மேற்கொள்ளலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe