கோவை மாவட்டத்தில் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாயை 32 ஆயிரம் பேர் வாங்கவில்லை

published 2 years ago

கோவை மாவட்டத்தில் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாயை 32 ஆயிரம் பேர் வாங்கவில்லை

கோவை: தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்தப் பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமலிருந்து விட்டனர். கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 476 அரிசி குடும்ப அட்டைகள் உள்ளன.

இதில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 150 பேர் பொங்கல் பரிசு தொகுப்பைப் பெற்றுள்ளனர். இது 97.06 சதவீதம் ஆகும். 32 ஆயிரத்து 326 பேர் பரிசுத்தொகுப்பை பெறவில்லை. இதனால் இவர்களது பணம் அரசுக்குத் திரும்பிச் சென்று விட்டது.

தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பி வந்துவிட்டது. இந்தத் தொகையை அரசுக் கருவூலத்தில் அதிகாரிகள் செலுத்தி விட்டனர். சென்னையை எடுத்துக் கொண்டால் வட சென்னையில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 728 குடும்ப அட்டைகளுக்கும், தென் சென்னையில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 552 குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 பணம் வழங்க ரேசன் கடைகளுக்குப் பணம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் வடசென்னையில் 9 லட்சத்து 83 ஆயிரத்து 5 பேரும், தென் சென்னையில் 9 லட்சத்து 90 ஆயிரத்து 14 பேர் மட்டுமே பொங்கல் பரிசு பணம் ரூ.1000 வாங்கி சென்றுள்ளனர். வடசென்னையில் 35 ஆயிரத்து 723 குடும்ப அட்டைதாரர்களும் தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 குடும்ப அட்டைதாரர்களும் ரூபாய் வாங்கவில்லை. இதேபோல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8026 கார்டு தாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,263 கார்டு தாரர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8,874 கார்டு தாரர்களும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe