மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்: பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது

published 2 years ago

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்: பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது

கோவை: கோவையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் மாற்றுத் திறனாளிகளுக்கானத் தேசிய அடையாள அட்டை வழங்குதல், தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், தனித்துவமான அடையாள அட்டை பதிவு, மருத்துவ உபகரணங்கள் வழங்கல், அறுவை சிகிச்சைக்குப் பயனாளிகள் தோ்வு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது.

எனவே மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் இம்முகாமை பயன்படுத்திக்கொள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முகாம்கள் பேரூா் வட்டாரத்தில் குனியமுத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்றும், கோவை மாநகா் வட்டாரத்தில் டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 3-ஆம் தேதியும், கிணத்துக்கடவு வட்டாரத்தில், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் தேதியும், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், நரசிம்ம நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 8-ஆம் தேதியும், அன்னூா் வட்டாரத்தில், அன்னூா் அமரா் எ. முத்துக்கவுண்டா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் தேதியும், காரமடை வட்டாரத்தில் மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.

சுல்தான்பேட்டை வட்டாரத்தில், சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 13-ஆம் தேதியும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 15-ஆம் தேதியும் எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில், எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 17-ஆம் தேதியும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 20-ஆம் தேதியும் ஆனைமலை வட்டாரத்தில், ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 22-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

சூலூா் வட்டாரத்தில் சூலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 23-ஆம் தேதியும், தொண்டாமுத்தூா் வட்டாரத்தில், தொண்டாமுத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 24-ஆம் தேதியும், மதுக்கரை வட்டாரத்தில், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பிப்ரவரி 27-ஆம் தேதியும், வால்பாறை வட்டாரத்தில், வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 28-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

முகாம்கள் காலை 9.30 முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் 4, ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களைக் கொண்டுவர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe