கோவையில் போக்குவரத்து காவல்துறையினருக்கு மின்விசிறியுடன் கூடிய பிரத்தியேக நிழற்குடை

published 2 years ago

கோவையில் போக்குவரத்து காவல்துறையினருக்கு மின்விசிறியுடன் கூடிய பிரத்தியேக நிழற்குடை

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றதிலிருந்து கோவைக்கு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வருகிறார். பொதுமக்கள்- காவல்துறையினர் இடையேயுள்ள நல்லுறவை மேம்படுத்த காவல்துறையினர் வீதிதோறும் நடந்து சென்று மக்களிடம் குறைகளைக் கேட்ட உத்தரவிட்டார். காவல்துறையினரின் மன அழுத்தத்தைப் போக்க ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்கள் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் புத்தக வாசிப்பை மேம்படுத்த, காவல்துறையினரின் மன இறுக்கத்தைப் போக்கக் கோவை மாநகர காவல்துறையினர் சார்பில் காவல் நிலையங்களில் நூலகங்கள் ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அடுத்தபடியாக, ஆட்டோக்களில் நூலகம் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ரேஸ்கோர்சில் 'ஸ்ட்ரீட் லைப்ரரி' ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடைப்பயிற்சியின் இடையே அமர்ந்து படிக்க வசதியாக, வாரத்தின் 7 நாள்களிலும், 24 மணி நேரமும் இந்த நூலகம் செயல்பட்டு வருகிறது.

மேலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். லட்சுமி மில் சந்திப்பில் வாகன ஓட்டிகள் சிக்கெனலுக்காகக் காத்திருக்கும் போது அவர்களது மன அழுத்தத்தைப் போக்க இசை ஒலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் முன்பு காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறையினருக்கு மின்விசிறியுடன் கூடிய பிரத்தியேக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

ஆணையர் அலுவலகம் முன்பு போக்குவரத்து காவல்துறையினர் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வெயில் நேரங்களில் சோர்வடையாமல் இருக்க தற்போது அவர்களுக்கு மின்விசிறியுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிழற்குடையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

இது காவல்துறையினர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe