மேட்டுப்பாளையத்தில் முதல்வர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர் மயங்கி பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு

published 2 years ago

மேட்டுப்பாளையத்தில் முதல்வர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர் மயங்கி பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு

கோவையின் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/J30Hw99ftHR2wHiYb8sllV

கோவை : கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோவையில் நிகழ்ச்சியினை முடித்து விட்டு உதகை செல்வதற்காக  மேட்டுப்பாளையம் வந்தடைந்தார்.

இந்நிலையில் முதல்வர் பாதுகாப்பிற்காகச் சேலத்திலிருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதில் சேலத்தைச் சேர்ந்த காவலர் ராஜாராம் என்பவரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்

மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் பிளாக் தன்டர் அருகே  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராஜாராம் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி சாலை ஓரத்திலிருந்த  பள்ளத்தில் விழுந்தார்.

இதனைக் கண்ட சக போலீசார் உடனடியாக பள்ளத்தில் விழுந்து காயமடைந்த  காவலர் ராஜராமினை மீட்டு, அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம்  அரசு மருத்துவமனைக்குக்  கொண்டு சென்றனர். தலை மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe