வட இந்தியர்களுக்கு அடிமை ஆக கூடாது.. மகளின் கவிதையுடன் கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த தந்தை

published 2 years ago

வட இந்தியர்களுக்கு அடிமை ஆக கூடாது.. மகளின் கவிதையுடன் கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த தந்தை

கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனால் அலுவலக வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.  அப்போது கோவை வடவள்ளி பகுதியைச் சார்ந்த பாலமுருகன் என்ற கட்டிட தொழிலாளி கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை ஈரோடு, திருப்பூர், மதுரை என பெரு நகரங்களில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர். சமீபத்தில் திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் தமிழக வாலிபரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களை விட வட மாநில தொழிலாளிகள் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்ப்பதனால் பெரும்பாலான முதலாளிகளால் வட மாநிலத்தவரை பணியில் அமர்த்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் வட மாநிலத்தவரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். வடமாநில தொழிலாளர்களால் பல தமிழக இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். குறிப்பாக கட்டிடத் தொழிலில் வட மாநில தொழிலாளிகளின் ஆதிக்கம் அதிகரித்து தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டிருக்கிறது.

அவர்களின் ஆதிக்கம் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்றார். இதனைத் தொடர்ந்து அவர் கலெக்டரிடம் தனது மகள் எழுதிய கவிதையுடன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பேனா, பென்சில்க்கு சண்டையிடும் அரசியல்வாதிகளுக்கும், விஜயா அஜித்தா என சண்டையிடும் ரசிகர் பெருமக்களுக்கும் ஒரு முக்கியமான வேண்டுகோள். அழிந்து வரும் தமிழகத்தையும், எனது தமிழ் மண்ணையும் மீட்டெடுப்போம் . வட இந்தியர்களிடமிருந்து என்னை போன்றவர்களையும், நமது வருங்காலத்தையும் போற்றி பாதுகாப்போம், போராடுவோம் தமிழகத்தை மீட்கும் வரை . இப்படிக்கு தமிழனின் ஒருவர் தமிழ் மதி. என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe