அமேசான் பெயரைப் பயன்படுத்தி கோவையில் இணையத்தில் நடக்கும் மோசடிகள்: பொது மக்களே உஷார்

published 2 years ago

அமேசான் பெயரைப் பயன்படுத்தி கோவையில் இணையத்தில் நடக்கும் மோசடிகள்: பொது மக்களே உஷார்

கோவை: அமேசான் நிறுவன பெயரைப் பயன்படுத்தி அலைப்பேசி விற்பனை மோசடியில் ஈடுபட்ட நபரைக் கோவை சைபர் குற்றக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கோவை ரேஸ்கோர்ஸில் வசிப்பவர் நடராஜமூர்த்தி, 59. பி. எஸ். என். எல். நிறுவனத்தில் உதவி பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தொலைப்பேசிக்கு, 3,999 ரூபாய் விலையில் அலைப்பேசி விற்பனைக்கு இருப்பதாக, அமேசான் நிறுவனத்தின் இணையதள 'லிங்க்' வந்தது.

அதைப் பார்த்த நடராஜமூர்த்தி, அந்த 'லிங்க்'-கிற்கு சென்று அலைப்பேசி ஆர்டர் செய்தார். பணம் செலுத்தும்படி அறிவிப்பு வந்ததும், இணையத்தில் பணமும் செலுத்தி விட்டார். ஆனால் அவருக்கு அலைப்பேசி எதுவும் வரவில்லை.

ஆய்வு செய்தபோது அவருக்கு வந்த 'லிங்க்' அமேசான் நிறுவனத்துடையது இல்லை என்றும், மோசடிப் பேர்வழிகள் அமேசான் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி ஏமாற்றியிருப்பதும் தெரியவந்தது. அவர், கோவை மாநகர காவல்துறையிடம் புகார் அளித்தார். சைபர் குற்ற எஸ். ஐ. சிவராஜபாண்டியன் வழக்குப் பதிந்தார். 
ஆய்வாளர் அருண் தலைமையிலான காவல் துறையினரின் மோசடிப் பேர்வழியைத் தேடி வருகின்றனர்.

காவல்துறையினர் கூறுகையில்:
"இணையத்தில் பொருட்கள் ஆர்டர் செய்வோரும், பணம் செலுத்துவோரும், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தாங்கள் ஆர்டர் செய்யும் இணையதளம் உண்மையானதா என்று அறிந்தபிறகே வர்த்தக செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe