மாசாணி அம்மன் குண்டம் திருவிழா: ஏராளமான பக்தர்கள் குவிந்தன

published 2 years ago

மாசாணி அம்மன் குண்டம் திருவிழா: ஏராளமான பக்தர்கள் குவிந்தன

கோவை: பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பூக்குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த மாதம், 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 3ஆம் தேதி மயான பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை குண்டம் கட்டப்பட்டு, மாலையில் சித்திர தேர் வடம் பிடிக்கப்பட்டு குண்டம் அருகில் நிறுத்தப்பட்டது. இரவு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று காலை, பக்தர்கள் ஆற்றில் நீராடி அம்மனை வழிபட்டு, குண்டம் இறங்கும் இடத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தலைமை முறைதாரர் மனோகரன், 
மயான அருளாளி அருண் உள்ளிட்டோர் கோவிலிலிருந்து, அம்மனின் சூலம் மற்றும் திரு ஆபரண பெட்டியுடன் கோவிலை வலம் வந்து, குண்டம் இறங்கும் இடத்துக்கு வந்தனர்.

காலை, 7:10 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. முறைதாரர் மற்றும் அருளாளி குண்டம் இறங்கினர். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், 'மாசாணி தாயே, அருள்புரிவாய் தாயே' என கோஷம் எழுப்பியபடி குண்டம் இறங்கி, வேண்டுதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விரதம் இருந்த காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் குண்டம் இறங்கினர்.

ஆண்கள் குண்டம் இறங்கி முடித்ததும், பெண்கள் குண்டத்திலிருந்த 'பூ'வை (அக்னி) கைகளில் அள்ளி கொடுத்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், எம். எல். ஏ.-க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் வசதிக்காகப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளைப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் அன்னதானம், நீர்மோர் வழங்கினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe