குன்னூருக்கு 19ம் தேதி ஜனாதிபதி வருகை.

published 2 years ago

குன்னூருக்கு 19ம் தேதி ஜனாதிபதி வருகை.

குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வரும், 19ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை.தருகிறார்.

கோவை ஈஷா யோகா மையத்தில் வரும் 18ம் தேதி நடக்கும், மகா சிவராத்திரிவிழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார். இதற்காக, டில்லியில் இருந்து மதுரை வரும் ஜனாதிபதி, மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்த பிறகு, கோவை வருகிறார்.

அன்று மாலை 6:00 மணிக்கு மேல் நடக்கும் சிவராத்தி விழாவில் பங்கேற்கிறார்.தொடர்ந்து, 19ம் தேதி, காலை 9.00 மணிக்குகோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகிறார்.

இங்கு வழக்கமான உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பகல் 12:00 மணிக்கு ஹெலிகாப்டர்மூலம் கோவை செல்கிறார்.

இது தொடர்பாக பாதுகாப்புஏற்பாடுகளை நீலகிரி போலீசார் துவக்கியுள்ளனர்.அனைத்து ஓட்டல்களிலும் தங்குவோர் விபரங்கள் சேகரிக்க உத்திரவிடப்பட்டுள்ளது.

தரை வழியாக செல்ல வேண்டி இருந்தால் அதற்கான வழிமுறைகள் குறித்து தொடர்ந்து நடக்கும் கூட்டங்களில் போலீசார் முடிவு செய்ய உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe