குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

published 1 year ago

குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

கோவை: கண் அழுத்த நோய் (குளுக்கோமா ) மற்றும் அதற்கான சிகிச்சை குறித்த விழிப்புணர்வை கோவையில் முக்கிய சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகளிடையே கல்லூரி மாணவ,மாணவிகள் ஏற்படுத்தினர்.

கண்ணில் அதிகரிக்கும் அழுத்தத்தின் காரணமாக பார்வைத்திறன் படிப்படியாக குறைந்து பார்வையிழக்கும் அபாயம் கொண்ட குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய்க்கு துவக்க நிலையிலேயே  உரிய சிகிச்சையை பெற வேண்டியது அவசியமாகும்.

இது குறித்து மக்களிடையே உணர்த்தும் பொருட்டு  ஒவ்வொரு ஆண்டும் உலக கண் அழுத்த நோய் வாரம் மார்ச் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.இந்நிலையில் ,இதனை முன்னிட்டு,கோவையில் கல்லூரி மாணவ,மாணவிகள் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

சரவணம்பட்டி சோதனை சாவடி முன்பாக உள்ள பிரதான சாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கண் அழுத்த நோய் வராமல் தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி   துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe