விரைவில் யார் அழைக்கிறார்கள் என நம்பரை சேவ் பண்ணாமலேயே தெரிந்து கொள்ளலாம்: ட்ராய் (TRAI)

published 2 years ago

விரைவில் யார் அழைக்கிறார்கள் என நம்பரை சேவ் பண்ணாமலேயே தெரிந்து கொள்ளலாம்:  ட்ராய் (TRAI)

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

புது டில்லி: இனி யாரேனும் அழைக்கும் போது அழைப்பவரின் பெயரைத் திரையில் ஒளிரச் செய்யும் ஒரு வழிமுறையைத் தொலைத்தொடர்புத் துறை விரைவில் வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களுடனான சந்தாதாரர்களின் நோ-யுவர்-கஸ்டமெர் (KYC) பதிவின்படி இந்த பெயர் இருக்கும்.

இது தொடர்பாக இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) தலைவர் பி.டி. வகேலா
"தொலைத்தொடர்புத் துறை விதிமுறைகளின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்களால் சேகரிக்கப்பட்ட KYC தகவலுக்கு இணங்க, அழைப்பாளரின் பெயரைத் திரையில் தோன்றச் செய்யும் வகையில் ஒரு வழிமுறையைத் தொலைத்தொடர்புத் துறை விரைவில் தொடங்கவுள்ளது. 

இதன்படி, சந்தாதாரர்கள் தங்கள் தொலைப்பேசியில் ஒருவரின் பெயரைச் சேமிக்கப்படாவிட்டாலும் அழைப்பாளரின் பெயரை அறிந்து கொள்வார்கள். தற்போது, ​​சில பயனர்கள் 'ட்ரூ காலர்' போன்ற செயலிகளைப் பயன்படுத்தி  அழைப்பாளர்களின் அடையாளத்தை அறிய முடியும். ஆனால் அந்த செயலியில் தோன்றும் தகவல் 'க்ரவுட் சோர்ஸ்'ஸைப் பொருத்தேயிருக்கும், அதாவது வேறு ஒருவர் சேமித்துள்ள தகவலைப் பொருத்தே இது தோன்றும்.  எனவே இது 100% உண்மையானதாக இருக்காது. KYC தரவிலிருந்து இதற்கான உத்தரவாதம் அளிக்கப்படும்.

இந்த பொறிமுறையின் கூடுதல் நன்மை என்னவென்றால், பெறுநர்கள் ஸ்பேம் மற்றும் கோரப்படாத, அதாவது அவர்கள் விரும்பாத அழைப்புகளைத் தவிர்க்கலாம் அல்லது தேவையான நடவடிக்கைக்காக அவற்றை அதிகாரிகளிடம் புகாரளிக்கலாம். இதுவரை, பல நடவடிக்கைகள் இருந்தபோதிலும், ட்ராயால் கோரப்படாத வணிக அழைப்புகளைப் பயனுள்ள முறையில் நிறுத்த முடியவில்லை.

இந்த விவகாரம் ஒருவரின் தனி மனித பாதுகாப்புடன், தனியுரிமையுடனும் தொடர்புடையது என்பதால், இறுதி முடிவை ட்ராய் எடுக்க முடியாது, அரசாங்கமே எடுக்க முடியும். இது பங்குதாரர்களின் பரவலான ஆலோசனைக்குப் பிறகே அரசுக்குப் பரிந்துரைக்கப்படும். சந்தாதாரர்களின் அனுமதியின்றி பெயர்களை வெளியிடுவதற்கு சில நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம். இது சம்மந்தமானக் கருத்துகள் பொது மக்களிடமிருந்தும் பெறப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe