12 சந்தன மரக் கட்டைகளுடன் ஈரோட்டைச் சேர்ந்த வாலிபர் கோவையில் கைது

published 1 year ago

12 சந்தன மரக் கட்டைகளுடன் ஈரோட்டைச் சேர்ந்த வாலிபர் கோவையில் கைது

கோவை: கோவை சாய்பாபா காலனி காவல் துறையினர் மேட்டுப்பாளையம் ரோடு காமராஜர் வீதியில் துணை-ஆய்வாளர் ஜெயசங்கர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அதில் 2 வாலிபர்கள் காவல் துறையினரைப் பார்த்ததும் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி தப்பியோடி விட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை மட்டும் காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர். அதில் 12 சந்தன மர துண்டுகள் இருந்தது. காவல் துறையினர் வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். 

விசாரணையில், அவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொம்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து (32) என்பதும், வடவள்ளி மடத்துக்குளம் மாரியம்மன் கோவில் அருகே சந்தன மரங்களை வெட்டி துண்டுகளை கைப்பையில் போட்டு எடுத்து வந்தது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அவரது நண்பர்களான விஜய், சசிகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe