கோவை புதூர் பத்திரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா தொடங்கியது

published 1 year ago

கோவை புதூர் பத்திரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா தொடங்கியது

கோவை: கோவையை அடுத்த கோவைபுதூர் என் பிளாக்கில் ஸ்ரீபத்திரகாளி அம்மன், ஸ்ரீகருப்பராயர், ஸ்ரீ குரு சக்தி நாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 

இந்த ஆண்டு 14-வது ஆண்டு சித்திரை குண்டம் திருவிழா இன்று தொடங்கியது. இன்று காலை 4.30 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. காலை 7 மணிக்கு கோ பூஜையும், 7:45 மணி அளவில் சப்த கன்னி பூஜையும் நடைபெற்றது. இன்று மாலை 6.30 மணிக்கு நாக பிள்ளையார் கோவிலில் இருந்து கொடிக்கம்பம் ஊர்வலமாக எடுத்து வந்து பத்ரகாளி அம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளை புதன்கிழமை மாலை 7 மணி அளவில் பிரத்தியங்கரா தேவி ஹோமம் நடைபெறவுள்ளது. 20-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 6.45 மணி முதல் மாலை 8 மணி வரை சண்டி பூஜை, ஹோமம் நடைபெற உள்ளது.

21 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.45 மணி அளவில் குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 22 -ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.45 மணியளவில் குருதி பூஜையும் 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.35 மணிக்கு நாக பிள்ளையார் கோவிலில் இருந்து பட்டு, படைக்கலன், தீர்த்தக்குடம் ஆலயத்திற்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும். 24 -ஆம் தேதி திங்கட்கிழமை காலை 4 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜையும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

அதைத் தொடர்ந்து காலை 8.45 மணிக்கு குண்டத்திற்கு பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு சகல வித வாத்தியங்களுடன் சக்தி கரகம் எடுக்க கோவிலில் இருந்து குளத்துப்பாளையம் கோகுலம் காலனி பொன்னுசாமி கவுண்டர் தோட்டத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மதியம் 12 மணிக்கு உச்சி பூஜையும் அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு சகல வித வாத்தியங்களுடன் பொன்னுசாமி கவுண்டர் தோட்டத்திலிருந்து சக்தி கரகம் எடுத்து கோவைப்புதூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரவு 8 00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 

25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு மகா அபிஷேகமும் அலங்கார பூஜையும் நடைபெறுகிறது. 10 மணிக்கு மேல் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சி பூஜையும், கருப்பராயர் காவடி எடுத்து விளையாடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மதியம் 3 மணிக்கு மேல் நாக பிள்ளையார் கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், 5 மணிக்கு கரகம் கரைப்பதற்கு புறப்பட்டு கோவைபுதூர் ஓம் சக்தி நகர் குளத்து தோட்டத்திற்கு செல்லுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 7.45 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்ற பின்பு கோவில் நடை அடைப்பு நடைபெறும்.

பின்னர் மே மாதம் 1-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு வழக்கம் போல் நடை திறக்கப்படும். அன்று மதியம் 12 மணிக்கு கருப்பராயருக்கு உச்சி பூஜை நடைபெறும். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ சித்தர் சக்திநாதர் அறக்கட்டளை நிறுவனர் ஆம் ஸ்ரீ சிவஜோதி சித்தரையா செய்து வருகிறார். மேலும் பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு பத்திரகாளி அம்மன் அருள் பெற்று செல்லுமாறு விழா குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe