மேத்தி அல்லது வெந்தயம் இந்திய உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாகும். வெந்தய விதைகள் மற்றும் இலைகளை பல வழிகளில் பயன்படுத்தலாம் - பருப்பு, சப்பாத்தி அல்லது கீரையாக சேர்த்து சாப்பிடலாம். ஆனால் வெந்தயம் நம் உணவின் சுவையை அதிகரிப்பதுடன் பல வகை நன்மைகளையும் அளிக்கிறது. இந்த மசாலாப் பொருள் மருத்துவ குணங்கள் நிறைந்ததால் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
வெந்தய இலைகள் பல தாதுக்கள் மற்றும் வைட்டமின்களின் களஞ்சியமாகும். அவற்றில் தயாமின், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின்கள் ஏ, பி6, சி, மற்றும் கே போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வெந்தயத்தில் தாமிரம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு, செலினியம், துத்தநாகம், மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளன.
வெந்தயம் பயக்கும் ஆரோக்கியப் பயன்கள்: 1. இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது: வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, குறிப்பாக குறைந்த அடர்த்தியுடைய கொழுப்புப்புரதம் (எல்டிஎல்), கொழுப்பு மற்றும் ட்ரை கிளிசரைடுகளை உடம்பு உள் இழுத்துக்கொள்வதை தடுக்கும். இயற்கையான முறையில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.
2. இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது: வெந்தயத்தில் கேலக்டோமனன் இருப்பதால், இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது சோடியத்தின் செயல்பாட்டை எதிர்த்து இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆரோக்கியமான இதயத்திற்கு யோகா செய்வதுடன் ஆரோக்கியமான உணவையும் உட்கொள்வது அவசியம்.
3. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் வெந்தயத்தை (விதைகள் அல்லது இலைகள் வடிவில்) கட்டாயம் சேர்க்க வேண்டும். வெந்தயத்தில் உள்ள இயற்கையான, கரையக்கூடிய நார்ச்சத்து கேலக்டோமனன், இரத்தத்தில் சர்க்கரையை உறிஞ்சும் விகிதத்தை குறைக்கிறது. இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும் அமினோ அமிலங்களும் இதில் உள்ளன.
4. செரிமானத்திற்கு உதவுகிறது: வெந்தயத்தில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி, செரிமானத்திற்கு உதவுகிறது. சில சந்தர்ப்பங்களில், அஜீரணம் மற்றும் வயிற்று வலியைப் போக்க வெந்தய டீ பயன்படுத்தப்படுகிறது. மலச்சிக்கலைச் சமாளிக்க வெந்தயக் கஷாயத்தைக் கூட அதிகாலையில் குடிக்கலாம்.
5. ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சலை எதிர்கொள்ள உதவுகிறது: நம் உணவில் ஒரு தேக்கரண்டி வெந்தய விதையை சேர்த்துக்கொள்வது அமில ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சலுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். வெந்தய விதையின் சாறு வயிறு மற்றும் குடலின் உட்பகுதியில் படும்பொழுது எரிச்சலூட்டும் இரைப்பை குடல் திசுக்களை ஆற்றும். சாப்பிடுவதற்கு முன், வெந்தய விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரைப் பருகுவதன் மூலம் இந்த நன்மையை பெறலாம்.
6. எடையை குறைக்க உதவுகிறது: ஊறவைத்த வெந்தய விதைகளை காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவதன் மூலம் வெந்தயத்தை உடல் எடை இழப்பதற்கான உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வெந்தயத்தில் உள்ள இயற்கையான கரையக்கூடிய நார்ச்சத்து, தண்ணீரில் ஊறி, வயிற்றை நிரப்பி, பசியை அடக்கி, உடல் எடை இழப்பிற்கான இலக்கை எட்டுவதற்கு உதவும்.
7. காய்ச்சல் மற்றும் தொண்டை வலிக்கு தீர்வு: வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எலுமிச்சை மற்றும் தேனுடன் உட்கொண்டால், உடலுக்கு ஊட்டமளிப்பதன் மூலம் காய்ச்சலைக் குறைக்கும். வெந்தயத்தில் உள்ள சளி போன்ற சாரின் விளைவு இருமல் மற்றும் தொண்டை வலியிலிருந்து விடுபட உதவுகிறது.
8. பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கிறது: பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் உட்கொள்ள வேண்டியவற்றில் வெந்தயம் முதன்மையானது. பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கும் டியோஸ்ஜெனின் என்ற பொருள் இருப்பதால் இது ஏற்படுகிறது.
9. பிரசவத்தைத் தூண்டி எளிதாக்குகிறது: கருப்பைச் சுருக்கத்தைத் தூண்டுவதன் மூலம் பிரசவத்தைத் தூண்டுவதில் வெந்தயம் உதவியாக இருக்கும் என்று அறியப்படுகிறது. இது பிரசவ வலியையும் குறைக்கிறது. ஆனால் இங்கே ஒரு எச்சரிக்கையை நாம் நினைவில் கொள்ள வேண்டும்- கர்ப்ப காலத்தில் வெந்தய விதைகளை அதிகமாக உட்கொள்வது கருச்சிதைவு அல்லது முன்கூட்டிய பிரசவத்தை ஏற்படுத்தும்.
10. மாதவிடாய் அசௌகரியத்தை குறைக்க உதவுகிறது: வெந்தயத்தில் ஈஸ்ட்ரோஜன் போன்ற பண்புகளைக் கொண்ட டியோஸ்ஜெனின் மற்றும் ஐசோஃப்ளேவோன்கள் போன்ற கலவைகள் உள்ளன, இது PMS உடன் தொடர்புடைய அசௌகரியம் மற்றும் மாதவிடாய் பிடிப்புகள் போன்ற அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. இது மாதவிடாய் சமையத்திம் ஏற்படும் உடல் சூடு மற்றும் மனநிலையில் ஏற்படும் மாறுதல்கள் போன்ற மாதவிடாய் அறிகுறிகளை எளிதாக்குகின்றன.
11. இரும்புச் சத்தை அதிகரிக்கும்: இளமைப் பருவத்தில் (மாதவிடாய் ஆரம்பம்), கர்ப்பம் மற்றும் பாலூட்டும் போது பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வெந்தயம் (மேத்தி) போன்ற பச்சை இலைக் காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல அளவு இரும்புச்சத்தை அளிக்கும். ஆனால் இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்க தக்காளி அல்லது உருளைக்கிழங்கை தயாரிப்புகளில் சேர்க்க வேண்டும்.
12. மார்பக அளவை அதிகரிக்க உதவுகிறது: வெந்தயத்தில் உள்ள ஈஸ்ட்ரோஜன் போன்ற பண்பு பெண்களின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதன் மூலம் மார்பக விரிவாக்கத்திற்கு உதவும்.
13. பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது: வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து (சபோனின்கள், சளி போன்றவை) உணவில் உள்ள நச்சுப் பொருட்களுடன் பிணைக்கப்பட்டு அவற்றை வெளியேற்றுகிறது. இது பெருங்குடலின் கழிவுகளை வெளியேற்றி புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
14. தோல் அழற்சியை ஆற்றவும், தழும்புகளை குறைக்கவும் உதவுகிறது: வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படும். அதே வேளையில், வெந்தயத்தில் அழற்சி எதிர்ப்பு கலவைகள் உள்ளன. அவை தீக்காயங்கள், கொதிப்பு மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற பல்வேறு தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன. வெந்தய விதைகள் தழும்புகளைப் போக்க உதவுவதாக அறியப்படுகிறது.
15. தோல் பிரச்சனைகளுக்கு உதவுகிறது: கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கங்கள் போன்றவற்றைத் தடுக்க வெந்தயத்தை ஃபேஸ் பேக்குகளில் பயன்படுத்தலாம். வெந்தய விதைகளை வேகவைத்த தண்ணீரில் முகத்தைக் கழுவுவது அல்லது புதிய வெந்தய இலைகளை அறைத்து முகத்தில் தடவுவது சருமத்தை பலபலக்கச் செய்யும்.
16. முடி பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது: வெந்தயத்தை நம் உணவின் ஒரு பகுதியாகப் பயன்படுத்துதல் அல்லது கூந்தலில் நேரடியாகப் பூசுவதற்குப் பசையாகப் பயன்படுத்தினால், கூந்தல் பளபளப்பாகவும் கருப்பாகவும் இருக்கும். தேங்காய் எண்ணெயில் இரவு முழுவதும் ஊறவைத்த வெந்தயத்தை தினமும் தலையில் மசாஜ் செய்வது முடி உதிர்தல் மற்றும் முடி உதிர்தலுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். பொடுகைத் தடுக்கவும் வெந்தயம் சிறந்தது.
இத்தனை நன்மைகளை அளிக்கும் வெந்தயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால் உடலை சீராக வைக்க உதவும். வெந்தய விதயை முதல் நாள் இரவே ஊற வைத்து மறு நாள் காலை அந்த நீரை பருகுவது பயன்களை முழுமையாக அளிக்கும்.
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!