ஜாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் வேண்டும்: தீண்டாமை முன்னணி ஆர்ப்பாட்டம்

published 2 years ago

ஜாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் வேண்டும்: தீண்டாமை முன்னணி ஆர்ப்பாட்டம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: ஜாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் நிறைவேற்றக் கோரி, கோவையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியானர் தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டத்தினர் கூறியதாவது:
"தமிழகத்தில் ஜாதி ஆணவக் படுகொலைகள் தொடர்கதையாகி வருகிறது. தர்மபுரி இளவரசன், திருச்செங்கோடு கோகுல் ராஜ், உடுமலை சங்கர், மேட்டுப்பாளையம் வர்ஷினி பிரியா, கனகராஜ் கிருஷ்ணகிரி சுவாதி, நந்திஸ் போன்ற படுகொலைகள் கண்ணுக்குத் தெரிந்த கொடூரங்களாக இருக்கிறது. பொதுவெளிக்கு வராத கொலைகளும் பல உள்ளன. எனவே இனியும் ஆணவ படுகொலைகள் நடைபெறக் கூடாது என்று வலியுறுத்திகிறோம்." என்றனர்.

ஆணவ படுகொலைகள் நடைபெறக் கூடாது என்பதை முன்னிருத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஆறுச்சாமி, மாநில பொதுச்செயலாளர் யூகே சிவஞானம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் சுப்ரமணியம்  உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe