கோவையில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி இன்று துவக்கம்

published 1 year ago

கோவையில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி இன்று துவக்கம்

கோவை: கோவை வ.உசி பூங்கா மைதானத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் துவங்கி இன்று துவங்கி 6 நாட்கள் வரை நடைபெற உள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த 55 ஆண்டுகளாக நாச்சிமுத்து கவுண்ட கோப்பை என்ற பெயரில் ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும், 19 ஆண்டுகளாக சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கோப்பை என்ற பெயரில் பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் நடைபெற்று வருகிறது. இதனிடையே இன்று அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் துவங்க உள்ளன.

இதுகுறித்து கோவை மாவட்ட பேஸ்கட் பால், சங்க துணை தலைவர், பழனிச்சாமி கூறியதாவது:  ஆண்களுக்கான 56வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை, மற்றும், பெண்களுக்கான 20வது சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான போட்டிகள் கோவையில் துவங்க உள்ளது. இந்த போட்டிகளில் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள அணிகள்  கலந்து கொள்ள உள்ளன. 

இன்று துவங்கி வரும்  ஜூன் 1ம் தேதி வரை  என 6 நாட்கள் போட்டிகள் நடைபெற உள்ளது. ஆண்கள் பிரிவில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள 10 அணிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் ஆண்கள் பிரிவில், புதுடில்லியை சேர்ந்த இந்திய கப்பல் படை அணி சார்பாக, லோனாவாலா, இந்திய விமானப்படை அணி, இந்தியன் இரயில்வே அணி, பெங்களூரு, பாங்க் ஆஃப் பரோடா அணி, திருவனந்தபுரம்  கேரளா போலீஸ் அணி, சென்னை  இந்தியன் வங்கி அணி, சென்னை  வருமானவரி அணி, சென்னை  தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி, திருவனந்தபுரம் கேரளா மாநில மின்சார வாரிய அணி மற்றும்  கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடுகின்றன.

 ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர். என். மகாலிங்கம் கோப்பையும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.20 ஆயிரம், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும்.

பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.15 ஆயிரம், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரமும், மேலும் இத்தொடரில் சிறப்பாக விளையாடும் வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதும் வழங்கப்படும் 

 இவ்வாறு அவர் கூறினார்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe