கோவை போலீசார் இனி ஆட்டோவில் ரோந்து போகப்போறாங்க..!

published 1 year ago

கோவை போலீசார் இனி ஆட்டோவில் ரோந்து போகப்போறாங்க..!

 

கோவை: கோவை மாநகர போலீசில் போலீசார் ரோந்து செல்வதற்காக பைக், ஸ்கூட்டர்கள், ஜீப்கள் உள்ளன. குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக இந்த வாகனங்களில் மாநகரில் இரவு முழுவதும் போலீசாா் ரோந்து சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது போலீசாருக்கு சிறிய தெருக்களில் கூட ஆட்டோவில் சென்று ரோந்து செல்ல வசதியாக புதிதாக நவீன வசதிகளுடன் கூடிய 2 பேட்டரி ஆட்டோக்கள் வாங்கப்பட்டு உள்ளன.

அதில் ஒன்று முழுவதும் மூடிய நிலையிலும், மற்றொன்று டிரைவர் அமரும் இடம் மட்டும் மூடிய நிலையில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நவீன பேட்டரி ஆட்டோவில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும் முடியும். அதில் ஒலிப்பெருக்கி, சைரன்கள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் அந்த ஆட்டோக்களில் உங்கள் பாதுகாப்பே எங்கள் குறிக்கோள், அவரச போலீஸ் எண், பெண்கள் புகார் தெரிவிக்கும் எண், மாணவர்கள், குழந்தைகள் புகார் எண்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்த அதிகாரிகள் கூறுகையில், '' போலீசாரின் ரோந்து பணிக்காக வாங்கப்பட்ட இந்த பேட்டரி ஆட்டோக்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கி.மீட்டர் வரை இயக்க முடியும். சிறிய தெருக்களில் கூட இரவு நேரத்தில் ரோந்து சென்று குற்றங்களை தடுக்க உதவியாக இருக்கும்''. என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe