காதலித்து திருமணம்... பெண் மரணம்...

published 1 year ago

காதலித்து திருமணம்... பெண் மரணம்...

கோவை:கோவையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் மர்ம மரணம்

 கோவை செல்வபுரத்தை சேர்ந்த கருப்புசாமி என்பவர் மகள் ரமணி (20). இவர் கோவை பேரூரில் உள்ள கல்லூரியில் பி.காம் சிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். 

இவர் அதே கல்லூரியில் படித்த கோவை மத்துவராயபுரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்த சஞ்சய் (20) என்ற மாணவரைப் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்தார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரமணி கணவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்தார். பின்னர் அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

இளம்பெண் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டரா?, அல்லது வேறு காரணமாக? என தெரியவில்லை. ரமணியின் உடலில் காயங்கள் இருந்ததால் ஆலாந்துறை போலீசார் மர்மச் சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், நேற்று கோவை அரசு மருத்துவமனையில் ரமணியின் பெற்றோர், உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து திடீர் போராட்டம் நடத்தினர். 

இளம்பெண்ணின் உடலில் காயங்கள் இருப்பதால் கணவர் வீட்டார் மீது சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

 உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் உடலைப் பெறச் சம்மதம் தெரிவித்தனர்.

 இதனையடுத்து மர்மமான முறையில் இறந்த ரமணியின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து அவர்களது உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை கூடம் முன்பு சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்றது அங்குச் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe