விவரம் கேட்டவரை சட்டவிரோதமாக விசாரித்த சம்பவம் : கோவையில் போலீசாருக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம்

published 2 years ago

விவரம் கேட்டவரை சட்டவிரோதமாக விசாரித்த சம்பவம் : கோவையில் போலீசாருக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம்

கோவை மதுக்கரை அருகே உள்ள திருமலையம்பாளையம் வார்டு 2ல் கவுன்சிலராக உள்ள ரமேஷ், கடந்த 2019 ஆம் ஆண்டு திருமலையம்பாளையம் பேரூராட்சியில் திட கழிவுகள் மேலாண்மை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டிருந்தார்..

இதற்கு ஆரம்பத்திலிருந்தே மிரட்டல்கள் வந்துள்ளது.

இந்த நிலையில் சில நாட்களில் சமூக ஆர்வலர் ரமேஷ் வீட்டிற்கு நள்ளிரவில் வந்த மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி, வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் , மற்றும் க.க.சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்த் குமார் ஆகியோர் சட்டவிரோதமாக சமூக ஆர்வலரை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர் ரமேஷ் மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மாநில மனித உரிமை ஆணையம் காவல்துறை அதிகாரிகள் 3 பேர் மீதும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது..

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe