இனி லட்சுமி மில் சிக்னலில் நிக்காம போய்க்கிட்டே இருக்கலாம்..!

published 1 year ago

இனி லட்சுமி மில் சிக்னலில் நிக்காம போய்க்கிட்டே இருக்கலாம்..!

கோவை : கோவை - அவிநாசி ரோட்டில், மேம்பாலம் கட்டும் பணிக்காக, லட்சுமி மில்ஸ் சந்திப்பு பகுதியில், 'யூ டேர்ன்' வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சிக்னலில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாததால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல், வாகனங்கள் சீராகச் செல்கின்றன.

கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. மொத்தம், 305 துாண்கள் அமைக்க வேண்டும். இதில், 292 இடங்களில் துளையிடப்பட்டு, துாண்கள் அமைக்கப்பட்டு விட்டன. லட்சுமி மில்ஸ் சந்திப்பில், 3 துாண்கள் அமைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

இதற்காக, லட்சுமி மில்ஸ் சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் அகற்றப்பட்டு, இரு வழித்தடத்திலும், 'யூ டேர்ன்' வசதி செய்யப்பட்டுள்ளது. 

அண்ணாதுரை சிலை, குப்புசாமி நாயுடு மருத்துவமனை பகுதியில் இருந்து வாகனங்களில் வருவோர், லட்சுமி மில்ஸ் சந்திப்பில் காத்திருக்காமல், ஹோப் காலேஜ் பகுதிக்கு நேராகச் செல்ல வேண்டும்.

  புலியகுளம் செல்ல, திண்டுக்கல் வேணு பிரியாணி கடைக்கு எதிரே அமைத்துள்ள, 'யூ டேர்ன்' பகுதியில் திரும்பிச் செல்ல வேண்டும். சுங்கம் செல்ல, அரசு விருந்தினர் மாளிகைக்குச் செல்வதற்கான, 'யூ டேர்ன்' பகுதியில், திருப்பிச் செல்ல வேண்டும்.

ஹோப் காலேஜ் பகுதியிலிருந்து வருவோர், அண்ணாதுரை சிலை பகுதிக்கு லட்சுமி மில்ஸ் சந்திப்பில் நிற்காமல் நேராகச் செல்லலாம்.

|புலியகுளம் செல்வோர் இடதுபுறம் திரும்ப வேண்டும். காந்திபுரம் செல்ல விரும்புவோர், ஜோன் ஓட்டல் முன்புறமுள்ள 'யூ டேர்ன்' பகுதியில் திரும்பி, லட்சுமி மில்ஸ் சந்திப்புக்கு வந்து, இடதுபுறம் செல்ல வேண்டும்.

 வழக்கமாக, லட்சுமி மில்ஸ் சிக்னலில், 3 நிமிடம் 'ரெட்' சிக்னல் போடப்படும்; நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்திருக்கும். 'கிரீன்' சிக்னல் கிடைத்ததும் வாகன ஓட்டிகள் போட்டிப் போட்டுக் கிளம்புவதால், நெருக்கடி ஏற்பட்டது.

தற்போது சிக்னலில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாததால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல், வாகனங்கள் சீராகச் செல்கின்றன. 

இதை, போக்குவரத்து போலீசாரும், மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழுவினரும் கண்காணித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe