கோவையில் இரும்பு கேட்டுகளை திருடும் கும்பலைப் பிடித்த போலீசார்.

published 1 year ago

கோவையில் இரும்பு கேட்டுகளை திருடும் கும்பலைப் பிடித்த போலீசார்.

கோவை: கோவை மாவட்டம், சூலூர், கருமத்தம்பட்டி பகுதியில் அருகம்பாளையம், மாதப்பூர் பகுதிகளில் தோட்டம் மற்றும் வீடு ஆகியவற்றில் கேட்டுகளை (Gate) திருடிய கும்பலைச் சேர்ந்த கொள்ளுப்பாளையம் குமார் மற்றும் மகேந்திரன் இரண்டு பேர் பிடிபட்டனர்.

திருட்டுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் பிடித்தனர். இவர்கள் தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள அண்ணாச்சி பழைய இரும்பு கடையில் கேட்டுகளை விற்றது தெரியவந்து.  அந்த கேட்டுகளையும் அங்கிருந்து மீட்டெடுத்தனர். அதோடு மட்டுமல்லாமல் கருமத்தம்பட்டி விளம்பரப் பலகை விழுந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்தும் கூட இரும்பு கம்பிகளை இந்த கும்பல் திருடி உள்ளது.

இதுகுறித்து போலீசாருடன் இணைந்து பிடித்த சி.பி செந்தில் குமார் கூறும் போது :-

பொது மக்கள் சிறுக, சிறுக கஷ்டப்பட்டுச் சேர்க்கும் பொருள்களை நள்ளிரவில் திட்டமிட்டுத் திருடும் கும்பலையும் திருட்டுப் பொருட்களை வாங்கும் கும்பலையும் போலீசார் கைது செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

கடந்த நான்கு நாட்களாக மிகவும் சிரமப்பட்டு கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் போலீசாருடன் இணைந்து இந்தத் திருடர்களைப் பிடித்ததாகக் கூறினார். பொருட்களை மீட்ட  செந்தில் குமாருக்கு இப்பகுதி மக்கள் பாராட்டினை தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe