சத்தி ரோடு விரிவாக்கம் விறுவிறு.. மரங்களை வெட்டுவது குறித்து பசுமை கமிட்டி ஆய்வு

published 1 year ago

சத்தி ரோடு விரிவாக்கம் விறுவிறு.. மரங்களை வெட்டுவது குறித்து பசுமை கமிட்டி ஆய்வு

கோவை: கோவை - சத்தி ரோடு விரிவாக்கப் பணிக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்க, பசுமை கமிட்டி நேற்று ஆய்வு செய்தது.

கோவை - சத்தி ரோட்டில் சரவணம்பட்டியில் இருந்து கரட்டுமேடு வரை நான்கு வழிச்சாலை; குரும்பபாளையத்தில் இருந்து புளியம்பட்டி வரை, 7 மீட்டரில் இருந்து, 10 மீட்டராக ரோட்டை அகலப்படுத்த, தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்திருக்கிறது.

இந்த சாலையில், 642 மரங்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத்துறை வேண்டுகோள் விடுத்தது. இம்மரங்களை வனத்துறை மதிப்பீடு செய்து, பசுமை கமிட்டி ஒப்புதல் தர வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முரளிகுமார், உதவி பொறியாளர் பிரசன்னா, வருவாய் ஆய்வாளர் நாகராஜ், கிராம நிர்வாக அலுவலர் அறிவுடைநம்பி, பசுமை கமிட்டி உறுப்பினர் சையத் ஆகியோர் நேற்று கள ஆய்வு செய்தனர்.

முதல்கட்டமாக, புளியம்பட்டியில் இருந்து குன்னத்துார் வரை, நெடுஞ்சாலைத்துறை பட்டியலிட்டுள்ள மரங்கள் இருப்பிடம், ரோடு விரிவாக்கத்துக்கு கண்டிப்பாக வெட்ட வேண்டுமா என அளவீடு செய்து பார்த்தனர்.

40-50 மரங்களை வெட்டாமல் பாதுகாக்கலாம் என அடையாளம் காணப்பட்டது. கணேசபுரம் பகுதியில் ரோடு குறுகலாக இருப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

விரிவாக்கம் செய்ய திட்டமிட்ட ரோட்டின் கடைசி பகுதி வரைக்கும் ஆய்வு செய்து, அதன்பின், வெட்ட வேண்டிய மரங்களை இறுதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe