ஆன்லைன் வேலை என வாட்ஸ் ஆப் மெசேஜ் வந்தால் நம்பாதீங்க.. கோவையில் ரூ.11 லட்சம் மோசடி.. உஷார்.!

published 1 year ago

ஆன்லைன் வேலை என வாட்ஸ் ஆப் மெசேஜ் வந்தால் நம்பாதீங்க.. கோவையில் ரூ.11 லட்சம் மோசடி.. உஷார்.!

கோவை: கோவையில் ஆன்லைன் வேலை என கூறி வாட்ஸ் ஆப்பில் குறுந்தகவல் அனுப்பி ரூ. 11 லட்சம் நூதன மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கணபதி மணியக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன்(57). இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது.

அதில், பகுதி நேரமாக ஆன்லைனில் வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கோபாலகிருஷ்ணன் அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தார். பின்னர் தனது விவரங்களை பதிவு செய்து ஆன்லைன் மூலமாக அவர்கள் அனுப்பும் பணிகளை முடித்து கொடுத்தார்.

இதனை தொடர்ந்து அவரது வாலட் கணக்கில் ரூ. 10 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. அதன்பின்பு கோபால கிருஷ்ணனை தொடர்பு கொண்ட மர்ம நபர் நீங்கள் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம். தொகைக்கு ஏற்ப லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்.

இதனை உண்மை என நம்பிய கோபால கிருஷ்ணன் அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் வெவ்வேறு கட்டங்களாக ரூ. 10,95,685 அனுப்பினார். ஆனால் மர்ம நபர் கூறிய படி எந்த விதமான லாபமும் கோபால கிருஷ்ணனுக்கு கிடைக்கவில்லை.

தான் செலுத்திய மொத்த தொகையையும் தனது கணக்கில் மீண்டும் வரவு வைக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த கோபால கிருஷ்ணன் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe