எம்.எல்.ஏ அலுவலகத்தில் நுழைந்த வாலிபர்  பஸ்சில் பாய்ந்து தற்கொலை புகைப்படத்தை வெளியிட்டு அடையாளம் காண போலீஸ் முயற்சி

published 1 year ago

எம்.எல்.ஏ அலுவலகத்தில் நுழைந்த வாலிபர்  பஸ்சில் பாய்ந்து தற்கொலை  புகைப்படத்தை வெளியிட்டு அடையாளம் காண போலீஸ் முயற்சி

கோவை :
கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க., எம்.எல்.ஏ., தொகுதி அலுவலகம் ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் அருகே அமைந்துள்ளது. 

கடந்த, 12ம் தேதி அலுவலகத்தில் பா.ஜ.க., கட்சி ஊழியர் விஜய் இருந்தார். 

அப்போது திடீரென வாலிபர் ஒருவர் அலுவலகத்தில் புகுந்து கதவை உள்பக்கமாக தாழிட முயற்சித்தார்.

 இதனை பார்த்த விஜய் உடனடியாக சென்று அந்த வாலிபரை அலுவலகத்தை விட்டு வெளியே தள்ளி கதவை சாத்தினார். 

மேலும்,
எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த வாலிபர் யார், உள்ளே புகுந்த நோக்கம் என்ன என்பது பற்றி விசாரிக்குமாறு ரேஸ்கோர்ஸ் போலீசில் விஜய் புகார் அளித்தார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த மர்ம வாலிபர் அவிநாசி ரோடு ஜி.டி., மியூசியம் எதிரே பஸ் சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

அவரின் உடலை ரேஸ்கோர்ஸ் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 அந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரின் புகைப்படத்தை வெளியிட்டு அவர் யார், என அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe