மதுக்கரை அருகே மணல் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல் டிரைவர் தப்பி ஓட்டம்

published 2 years ago

மதுக்கரை அருகே மணல் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல் டிரைவர் தப்பி ஓட்டம்

கோவை, ஜூன்.3-
கோவை மதுக்கரையை அடுத்த வழுக்குப்பாறை தாசில்தாரராக வேலை செய்து வருபவர் விஜயகுமார்.
வாகன சோதனை சம்பவத்தன்று இவர் அதிகாரிகளுடன் சட்டகல்புதூர்-கன்னமநாயக்கனூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை ஓட்டி வந்த டிரைவர்  அங்கு தாசில்தார் வாகன சோதனையில் ஈடுபடுவதை கண்டார்.


பின்னர் லாரியை ரோட்டோரம் நிறுத்தி லாரியில் இருந்து குதித்து டிரைவர் தப்பி ஓடினார்.இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த லாரி அருகே சென்று சோதனை செய்தனர். அதில் அனுமதி இல்லாமல் 3 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
யார்? இதையடுத்து தாசில்தார் லாரியை பறிமுதல் செய்து மதுக்கரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த லாரியை ஓட்டி வந்ததது யார்? எங்கு இருந்து மணல் கடத்தி வரப்பட்டது? லாரியின் உரிமையாளர் யார்? விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe