யூ.டி.எஸ்., நிறுவனத்தின், 36 வங்கி கணக்குகள் முடக்கம் *ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கையகப்படுத்த நடவடிக்கை

published 1 year ago

யூ.டி.எஸ்., நிறுவனத்தின், 36 வங்கி கணக்குகள் முடக்கம்  *ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கையகப்படுத்த நடவடிக்கை

கோவை : தமிழகம் முழுவதும் உள்ள யு.டி.எஸ்., நிதி நிறுவனத்தின், 36 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து, 4 கோடி ரூபாய் சொத்துக்களை கையகப்படுத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவை சூலுாரை சேர்ந்தவர் ரமேஷ், 30. இவர் பீளமேட்டில் யு.டி.எஸ்., என்ற நிதி நிறுவனத்தை கடந்த, 2012 ம் ஆண்டு தொடங்கி உள்ளார். கோவையில் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனத்தை சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கேரளாவிலும் கிளைகளை தொடங்கினார்.

 பின் அவர் நிறுவனம் சார்பில், 4 கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார். இதனை நம்பி அந்த நிதி நிறுவனத்தில், 76,597 பேர் ரூ.1,300 கோடி முதலீடு செய்தனர். இந்நிலையில் மக்களின் முதலீட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் அவர் மோசடி செய்தார். 

இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், துணை சூப்பிரண்டு முருகானந்தம் தலைமையில் கோவையில் தனி குழு அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவான ரமேஷ் கடந்த, 6ம் தேதி கோவை டான்பிட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவரை போலீசார் காவலில் எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது,
ரமேசை காவலில் எடுக்க திட்டமிட்டு வருகிறோம். அவரது நிறுவனத்தின், 36 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதில், 2 வங்கி கணக்குகளில் இருந்து, 16 லட்சம் மீட்கப்பட்டு உள்ளது. 

மேலும் தமிழகம் முழுவதும், யு.டி.எஸ்., நிறுவனம் மற்றும் ரமேசுக்கு சொந்தமான, 10 இடங்களில் உள்ள வீடு, நிலம் உட்பட ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல மோசடிக்கு ரமேசுக்கு உடந்தையாக இருந்த, 7 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்கள் விரையில் கைது செய்யப்படுவார்கள், என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe