சக ஊழியர்களால் தாக்கப்பட்டதாக அரசு மயக்க மருந்து நிபுணர் புகார்

published 2 years ago

சக ஊழியர்களால் தாக்கப்பட்டதாக அரசு மயக்க மருந்து நிபுணர் புகார்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/FePOfH8LTBKE40nzrfPpnD

திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் பி ஆர் சுரேஷ் குமார் தன்னைத் தனது சக ஊழியர்கள் தாக்கியதாகப்  போலீசில் புகார் அளித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது:

"நான் இப்போது திருப்பூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றிவருகிறேன். நான் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு இட மாறுதல் பெற்றுள்ள நிலையில் நான் அங்கு பணியில் சேர அனுமதிக்காமல் எனது சக ஊழியர்கள் தடுத்து வருகின்றனர். இது குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளைச் சந்திக்கவும் அனுமதிக்காமல் தடுத்து வருகின்றனர். மேலும் இந்த தகறாரில் அவர்கள் என்னைத் தாக்கியுள்ளனர்."

இவ்வாறு கூறி அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதற்குப் பதிலாக சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் தங்களை மருத்துவர் சுரேஷ் ஜூன் 2-ம் தேதி கத்தியைக் காட்டி மிரட்டியதாக கூறியுள்ளார். 

இது குறித்து சமூக சேவை பதிவேட்டில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் இன்னும் எஃப். ஐ. ஆர் போடப்படவில்லை எனவும் போலீசார் கூறினர்.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe