கோவையில் சாலை விபத்தில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கிய கார்

published 1 year ago

கோவையில் சாலை விபத்தில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கிய கார்

கோவை: சாலை விபத்தில் சிக்கிய கார் அப்பளம் மாதிரி நொறுங்கியது - போக்குவரத்து போலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை செல்வபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் நேற்றிரவு ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு சென்றுவிட்டு தனியார் உணவகத்தில் சாப்பிட்டு திரும்பி வந்தபோது கார் விபத்தில் சிக்கி சாலையில் உருண்டது.

இதில் கார் அப்பளம் மாதிரி நொறுக்கியது. காரில் பயணித்த  வெங்கடேஷ், கௌதம், ராஜ பிரபு,  விக்ரம், மற்றும் அர்ஜுன் ஆகியோருக்கு லேசான காயங்களும் வெங்கடேஷுக்கு மட்டும் ஓரளவுக்கு பெரிய காயம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

விபத்தானது நள்ளிரவு 12 மணி அளவில் இந்த நடைபெற்றது எனவும் விபத்துக்கான காரணம் முன்னாடி சென்றுக்கொண்டிருந்த கண்டெயினர் லாரியை ஒவர்டேக் எடுக்க முயற்சித்த போது எதிரே வாகானம் வந்தபோது போது ஏற்பட்ட தடுமாற்றத்தின் காரணமாக சாலையில் வாகனம் கவிழ்ந்து உருண்டுள்ளதாக தெரிகிறது.

விபத்து குறித்து  காந்திபுரம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe