நீலகிரியில் சீசன் முடிவடைந்தும் குவியும் சுற்றுலா பயணிகள் : சாலைகளில் கடும் வாகன நெரிசல்

published 2 years ago

நீலகிரியில் சீசன் முடிவடைந்தும் குவியும் சுற்றுலா பயணிகள் : சாலைகளில் கடும் வாகன நெரிசல்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/FePOfH8LTBKE40nzrfPpnD

நீலகிரி : ஊட்டியில் கோடை சீசன் முடிவடையும் தருவாயில் இன்னமும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.  

குறிப்பாக ஊட்டியில் உள்ள அரசினா் தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு மலா்க்காட்சி முடிவடைந்த பின்னரும் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.

இதில் கடந்த வியாழக்கிழமை முதல் நேற்று வரை சுமாா் 50,ஆயிரம் சுற்றுலாப் பயனிகள் ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவை பாா்வையிட்டுள்ளனா்.
கடந்த வியாழக்கிழமை சுமாா் 12,500 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை 14 ஆயிரமாகவும் , சனிக்கிழமை அதிகபட்சமாக 18ஆயிரமாகவும் அதிகரித்திருந்தது.

அதேபோல, அரசினா் ரோஜா பூங்காவில் வியாழக்கிழமை சுமாா் 6,500 பேரும், வெள்ளிக்கிழமை 7,500 பேரும் வந்திருந்த நிலையில், சனிக்கிழமை 10,000ஆக அதிகரித்திருந்தது.

இதைப்போலவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 13-ந் தேதிக்குப் பிறகே திறக்கப்பட உள்ளது.

இதனால்  அடுத்த வாரம் வரையில் ஊட்டி மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்குமென எதிா்பாா்க்கப்படுகிறது.

நீலகிரியில் குவியும் சுற்றுலா பயணிகளால்  அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe