கேஸ் சிலிண்டர் விலை.. இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. அரசின் அட்டகாசமான பிளான் ரெடி

published 1 year ago

கேஸ் சிலிண்டர் விலை.. இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. அரசின் அட்டகாசமான பிளான் ரெடி

சென்னை: தண்ணீர் குழாயை போல, வீட்டுக்கு வீடு எரிவாயு கொண்டு சேர்ப்பதற்கு, மத்திய அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது..

இந்த முறைக்கு சிலிண்டரை நிறைய கிராக்கி உள்ளதாம்.. மக்களும் நல்ல வரவேற்பு தந்து வருவதாக சொல்கிறார்கள்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தமிழகம் முழுவதும் குழாய் வழித்தடம் மூலம் இயற்கை எரிவாயுவை விநியோகம் செய்வதற்காக சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் விழுப்புரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் வரியாக குழாய் வழித்தடம் அமைத்து வருகிறது.

இயற்கை எரிவாயு: இந்த பணிகள் முடிந்ததுமே, வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்பட உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் மொத்தம் 1.61 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணிகளை மேற்கொள்வதற்காகவே, 7 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது..

இதனையடுத்து தலைநகர் சென்னையில் இந்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோக இணைப்புகள் விரைவில் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வசதிகள்: சிலிண்டரை விட இந்த குழாய் மூலம் எரிவாயு கிடைப்பது வசதியாக இருக்கிறது என்று பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.. மேலும், சிலிண்டர் மூலம் ரூ.1,000 செலவு என்றால், இந்த குழாய் மூலம் ரூ.800-850 மட்டுமே செலவாகும் என்கிறார்கள்.. இவ்வாறு வழங்கப்படும் இணைப்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வழங்கப்படும் இணைப்புகளைவிட தனி வீடுகளுக்கு வழங்கப்படும் இணைப்புகளுக்கு அதிகம் செலவாகும் என கேஸ் கம்பெனிகள் சொல்கின்றன..

அதேபோல, 2வது இணைப்பை இதில், பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும்.. அதுமட்டுமல்ல, குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோக இணைப்புகள் பெறப்பட்டால், ஸ்டவ் அமைப்பு மாற்றப்பட வேண்டுமாம்.. நாகப்பட்டினம், சென்னை என 2 மாவட்டங்களில் மட்டும் அடுத்த 8 வருடங்களில் சுமார் 33 லட்சம் பைப் லைன் இணைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

நாகப்பட்டினம்: ஆனால், முதன் முறையாக கடந்த ஜுன் 17ம் தேதி நாகை மாவட்டம் சியாத்தை மங்கம் கிராமத்தில்தான், 14 வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்பட்டது... இப்போது, நாகப்பட்டினத்தில் மொத்தம் 30 வீடுகளுக்கும், வேலூரில் 7 வீடுகளுக்கும் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன...

சென்னையை பொறுத்தவரை, முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் மற்றும் கேளம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த வசதி உருவாக்கப்படும் என்கிறார்கள்.. முக்கிய நகரங்களை மட்டுமல்லாது, கிளைக் குழாய்களையும் பதித்து இதர பல நகரங்களையும் இதன்மூலம் இணைக்க முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அப்பார்ட்மென்ட்: இப்போது, அதுகுறித்த அப்டேட் ஒன்றுதான் நமக்கு கிடைத்துள்ளது.. இந்த இயற்கை சுமையல் எரிவாயு திட்டத்தை, அப்பார்ட்மென்ட்களில் எப்படி விநியோகிப்பது என்ற சிக்கல் கிளம்பியது.. காரணம், தமிழகத்தில் அதிகளவு அடுக்குமாடி குடியிருப்புகள் தற்போது பெருகிவிட்டன.. அதிலும், 20 மாடி, 15 மாடி என அப்பார்ட்மென்ட் கட்டிடங்கள் உள்ளன.. இங்கெல்லாம் ஏறி சிலிண்டர் விநியோகம் செய்வதில் விநியோகஸ்தர்களுக்கும், மக்களுக்கும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன..

அதனால்தான், சோதனை முயற்சியாக சென்னையில் உள்ள குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, பைப் லைன் மூலம் தற்போது இயற்கை சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது.

2ம் கட்டம்: இதனிடையே, 2ம் கட்டமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் கோவை, சேலம், மதுரை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தினசரி நாம் பயன்படுத்திய எரிவாயு அளவு எவ்வளவு என்பதை, நம்முடைய வாட்ஸ்அப் மூலமாகவே, நாம் தெரிந்து கொள்ளும் வசதியும் இதில் இருக்கிறதாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe