வருவாய் துறை அலுவலர்களுடனான ஈராண்டு ஆய்வுக் கூட்டம்..!

published 1 year ago

வருவாய் துறை அலுவலர்களுடனான ஈராண்டு ஆய்வுக் கூட்டம்..!

 கோவை :

 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகை கூட்டரங்கில் இன்று  வருவாய் துறை அலுவலர்களுடனான ஈராண்டு ஆய்வுக் கூட்டம் கூடுதல் தலைமை செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையர் (நிர்வாகம்) / மாவட்ட வருவாய் அலுவலர் திருமங்கலராம சுப்பிரமணியம்.

டாக்டர்.மோ.ஷர்மிளா, மாவட்ட ஊரக மாவட்ட வளர்ச்சி வருவாய் அலுவலர் முகமை திட்ட இயக்குநர்  செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோகிலா, வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன்,  வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, வருவாய்த்துறை பிரிவு அலுவலகங்கள், இ-சேவை மையம் பதிவறை உள்ளிட்ட அலுவலகங்களை எஸ்.கே.பிரபாகர்,நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அன்னூர் வட்டம், வடவள்ளி பகுதியை சேர்ந்த குணசேகரனுக்கு, கருணை அடிப்படையில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிவதற்கான பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe