மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

published 1 year ago

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை: மின்வாரியம் மின் உரிமை வழங்கும் வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின் வாரியம், மின் உரிமை வழங்கும் வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றை கண்டித்து அனைத்தும் மின் ஒப்பந்ததாரர்கள் மின் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சோதனை அறிக்கைக்கு பதிலாக அனெக்சர் 1,2,3 கட்டாயம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும், மின் உரிமம் மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும், வீட்டு உரிமையாளர்கள், சிவில் இன்ஜினியர்கள், மேஸ்திரிகள் மின் உரிமம் பெற்ற வயரிங் கான்ட்ராக்டர்களின் மேற்பார்வையில் மட்டுமே மின்சாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்

அவ்வாறில்லாத கட்டிடத்திற்கு மின் இணைப்புகளை வழங்கக் கூடாது. உரிமம் புதுப்பிக்கும் போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும், உரிமம் வழங்குதல் புதுப்பித்தல் போன்றவற்றை ஆன்லைன் முறையில் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், 42 அடி உயரம் உள்ள வீட்டுமனை கட்டிடங்களுக்கும் 2000 சதுர அடி வரை உள்ள வணிக கட்டிடங்களுக்கும் Completion Certificate இல்லாமல் மின் இணைப்பு வழங்க வேண்டும், ISI மற்றும் ISO தரச் சான்றுள்ள Duplicate இல்லாத மின் சாதனங்கள் மற்றும் மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது  கட்டாயமாக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இச்சங்கத்தை சேர்ந்த அனைத்து மின் ஒப்பந்ததாரர்கள், மின் பணியாளர்கள், பிளம்பர்கள், ஹெல்பர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe