பயங்கரமான திருடனா இருப்பாங்க போலயே..! ஜவுளிக்கடை முன் நின்றிருந்த வாகனம் அபேஸ்..!

published 1 year ago

பயங்கரமான திருடனா இருப்பாங்க போலயே..! ஜவுளிக்கடை முன் நின்றிருந்த வாகனம் அபேஸ்..!

கோவை : மேட்டுப்பாளையத்தில் ஜவுளிக்கடை முன்பு நிறுத்தி வைக்க பட்டிருந்த இருசக்கரவகனத்தை நான்கு பேர் கொண்ட கும்பல் பூட்டை உடைத்து எடுத்து செல்லும் சி. சி. டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் தனியார் ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது.இந்த கடையில் பானு என்ற பெண் பணிபுரிந்து வருகிறார்.
இன்று பணிக்காக அவர் இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில் கடை  முன்பு உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று  அக்கம் பக்கம் நோட்டமிட்டு யாரும் கவனிக்காத சமயத்தில் இருசக்கர வாகனத்தின் பூட்டை காலாலேயே உடைத்து வாகனத்தை கொண்டு சென்றுள்ளனர்.

மதியம் உணவு இடைவேளையின் போது வாகனத்தை வந்து பார்த்த போது காணமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்து கடையில் இருந்த சி. சி. டி. வி கேமராக்களை ஆய்வு செய்த போது நான்கு பேர் கொண்ட கும்பல் வாகனத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து வாகனத்தை பரிகொடுத்த பெண் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வாகனத்தை எடுத்து சென்றவர்கள் பைனான்ஸ் நிறுவனத்தினர் எனவும்,வாகனத்திற்கு பைனான்ஸ் கட்டாததால் எடுத்து சென்றுள்ளதாகவும்,வாகன உரிமையாளரிடம் எந்த ஒரு தகவல் அளிக்காமல் பூட்டை உடைத்து எடுத்து சென்ற நான்கு பேரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe