Google Pay-யில் இனி பாஸ்வேர்டே தேவையில்லையா? புதிய UPI LITE சேவை அறிமுகம்!

published 1 year ago

Google Pay-யில் இனி பாஸ்வேர்டே தேவையில்லையா? புதிய UPI LITE சேவை அறிமுகம்!

கூகுள் நிறுவனத்தின் பேமெண்ட் சேவையான கூகுள் வியாழக்கிழமையன்று UPI PIN பதிவிடாமல் ஒரே கிளிக்கில் பேமெண்ட் செய்ய முடியும் புதிய UPI LITE சேவையை அறிமுகம் செய்துள்ளது. இது என்ன புதுசா இருக்கு..? பொதுவாக எந்தவொரு யூபிஐ பேமெண்ட் ஆக இருந்தாலும் பின் யுபிஐ பாஸ்வேர்டு கொடுத்துத் தானே பேமெண்ட் செய்வோம். பின் எப்படி இந்த சேவை இயங்குகிறது.

நீங்கள் பேடிஎம் யுபிஐ சேவையை தொடர்ந்து பயன்படுத்தி வந்திருந்தால் இது உங்களுக்கு தெரிந்திருக்கும். பேடிஎம் நிறுவனமும் சமீபத்தில் யுபிஐ லைட் சேவையை அறிமுகம் செய்தது, இந்த சேவையிலும் பாஸ்வேர்ட் இல்லாமல் யார் வேண்டுமானாலும் பேமென்ட் செய்ய முடியும். இதேபோன்ற சேவையை தான் தற்போது கூகுள் பே அறிமுகம் செய்துள்ளது.

யுபிஐ லைட் சேவை என்பது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்தாலும், ஒவ்வொரு முறையும் வங்கி கணக்கில் இருந்து ரியல் டைம்-ல் பணம் டெபிட் ஆகி பேமேண்ட் ஆகாது. இதற்கு மாறாக யுபிஐ லைட் சேவையின் லேலெட்-ல் ஒரு குறிப்பிட்டத்த தொகையை லோடு செய்துக்கொண்டு அதன் மூலம் பாஸ்வேர்டு இல்லாமல் பேமெண்ட் நடக்கிறது.

யுபிஐ லைட் சேவை கணக்கு பொறுத்த வரையில் ஒரு நாளுக்கு 2 முறை 2000 ரூபாய் தொகையை இக்கணக்கில் லோடு செய்துகொண்டு, ஒவ்வொரு பரிவர்த்தனையும் 200 ரூபாய்க்கு கீழ் பாஸ்வேர்டு இல்லாமல் பேமெண்ட் செய்துகொள்ள முடியும். இதன் மூலம் ஒவ்வொரு முறையும் பேமெண்ட் ஆப்-கள் வங்கி சர்வர்-ஐ இணைக்கும் பணி இருக்காது, வேலெட்-ல் இருந்து பேமெண்ட் செலுத்தப்படுவதால் வங்கி கணக்கில் இருக்கும் சிறிய அளவிலான தொகை இந்த வேலெட்-களுக்கு வரும் காரணத்தால் பேடிஎம், கூகுள் பே, போன்பே ஆகியவை சிறிய அளவிலான பண புழக்கத்தை பெரும்.

கூகுள் பே வாடிக்கையாளர்கள், கூகுள் பே செயலிக்கு சென்று UPI LITE என்பதை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்தாலே போதுமானது. ஒரு நாளுக்கு 4000 ரூபாய் தொகையை லோடு செய்து ஒரு பேமெண்ட்-க்கு 200 ரூபாய்க்கு கீழ் எவ்விதமான யுபிஐ பாஸ்வேர்ட் இல்லாமல் பேமெண்ட் செய்ய முடியும். பேமெண்ட் முடியும் போது Pay PIN-Free என்பதை கிளிக் செய்தால் போதும்.

இந்திய ரிசர்வ் வங்கி இந்த யுபிஐ லைட் சேவையை செப்டம்பர் 2022ல் அறிமுகம் செய்தது, சுமார் 15 வங்கிகள் இத்தகையை யுபிஐ லைட் சேவை அளிக்கிறது.




 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe