பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி CITU, CWFI கோவை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..!

published 1 year ago

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி CITU, CWFI கோவை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..!

கோவை

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று CITU மற்றும் CWFI கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 "கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை நிதி 5000 வழங்க வேண்டும், 35, 36, 37 கட்டுமான வாரிய கூட்டு முடிவுகளை அரசாணையாக வெளியிட வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு 3000 ரூபாய் பென்ஷன் வழங்க வேண்டும், பெண்களுக்கு 55 வயதிலிருந்து பென்ஷன் வழங்கிட வேண்டும், பண பயன்களை உடனுக்குடன் வழங்கிட வேண்டும்" ஆகிய கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படுகின்றன.

மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் மனோகரன், CWFI நிர்வாகிகள் உட்பட சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe